ஞாயிறு, 30 மே, 2010

பதக்க மங்​கை​கள்!


First Published : 30 May 2010 10:21:00 AM IST


பதக்கங்களுடன் வீராங்கனைகள்
தென் கொரியாவில் உருவான தற்காப்புக் கலையான டேக்வாண்டோ தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கராத்தே போட்டிகளுக்கு இணையாக டேக்வாண்டோ விளையாட்டிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தைப் பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கைகளையும், கால்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி விளையாடும் இந்தப் போட்டிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.குஜராத் மாநிலம், சூரத் நகரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான 4-வது சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற 19 மாணவ, மாணவிகளில் 16 பேர் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகளில் 6 பேர் பதக்கம் பெற்றனர். ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வீரர்கள் பெற்றனர். இந்தக் குழுவில் இடம்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.வெற்றி மகிழ்ச்சியில் ஊர் திரும்பிய பதக்க வீராங்கனைகளான எல். புவனேஸ்வரி (தங்கம்), ஆர். ஜெயஸ்ரீ (வெள்ளி), ஏ. அருள்ஜோதி, ஜி. அனு கீர்த்தனா, எஸ். கண்ணம்மா, வீரர் எம்.ஜி. சந்தோஷ்குமார் (வெண்கலம்) ஆகியோர் திருச்சி புத்தூரில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.தங்கள் அணியின் வெற்றிப் பயணம் குறித்து ஆர்.ஜெயஸ்ரீ பேசினார். ""தமிழக அணியில் 19 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 26 பேர் பங்கேற்றோம். அனைவருமே எங்களுடைய திறமைகளை நன்றாக வெளிப்படுத்தினோம். சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் என திருச்சியில் இருந்து 7 பேர் கலந்து கொண்டோம்.கராத்தே போட்டியில் கைகளுக்கு மட்டுமே அதிக வேலை இருக்கும். ஆனால், டேக்வாண்டோவில் அப்படியில்லை. கைகளைவிடக் கால்களால்தான் அதிகம் விளையாட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டோ பயிற்சி அளித்து வரும் திருச்சி டேக்வாண்டோ சங்க பொதுச் செயலர் எம். கணேசன் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.இந்த விளையாட்டில் பெண்களிடம் அதிக ஆர்வம் இருப்பதற்குப் பள்ளி பருவத்திலேயே பயிற்சி அளிக்கப்படுவதுதான் காரணம். உரிய பாதுகாப்பு சாதன வசதிகள் இருப்பதால், எங்களால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் விளையாட முடிகிறது'' என்றார் அவர்.

சனி, 29 மே, 2010

புதன், 26 மே, 2010

.பாடலுடன் ஓவியம்!

இலக்கு இல்லாத வாகனத் தணிக்கை...

தி..​ இன்பராஜ்
First Published : 26 May 2010 03:25:57 AM IST

Last Updated : 26 May 2010 05:59:15 AM IST

திருச்சி ​​ :​ ​ ​ ​ ​திருட்டு வாகனங்களைக் கண்டுபிடிப்பது,​​ குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரைக் கட்டுப்படுத்துவது,​​ பழைய குற்றவாளிகளை அடையாளம் காண்பது,​​ வெளியாள்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது போன்றவையே வாகனத் தணிக்கையின் நோக்கம்.

ஆனால்,​​ தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளில் இந்த விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படாமல் அபராதம் விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டு போலீஸôர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடக்க காலங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது ஓட்டுநர் உரிமம்,​​ ஆர்.சி.​ புத்தகம்,​​ வாகனக் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் போலீஸôர் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பர்.

ஆனால்,​​ நாளடைவில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர் தங்களுக்குத் தேவையான "மாமூலை' பெறத் தொடங்கினர்.​ இதனால்,​​ போக்குவரத்து பிரிவுக்குச் செல்ல காவலர்களிடையே கடும் போட்டி நிலவியது.

குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் போதும் அல்லது கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வாகன ஓட்டிகள் நிர்பந்திக்கப்படுவதால் விதிமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.​ ​

இதில்,​​ இன்னொரு பிரச்னையும் உள்ளது.​ சமூக விரோதிகள்,​​ குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் வாகனங்களில் பயணிக்கும் போது ஆயுதங்களை எடுத்துச் சென்றாலும்,​​ அவ்வளவு எளிதாக போலீஸôரிடம் சிக்காததற்கு இந்த "மாமுல்' சோதனையும் ஒரு காரணமே!

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ,​​ அதற்கு எதிர்மாறாக சில காவலர்களின் நடவடிக்கையால் நோக்கம் நிறைவேறாமல் போனது.

தற்போதும், ​​ இரு சக்கர வாகனங்கள் மீது காட்டும் தீவிரத்தை போலீஸôர் கார்,​​ வேன்,​​ தனியார் பேருந்து ஆகியவற்றில் காட்டுவதில்லை.​ ஏனென்றால்,​​ காரில் வருவோரிடம் அபராதம் வசூலித்தால் தங்களது வேலைக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளூர போலீஸôரிடம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியைப் பொருத்தவரை வாகனத் தணிக்கை என்பது அன்றாடமாகிவிட்டது.​ நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.​ ஒரு லட்சம் வரை அபராதத் தொகை வசூலிப்பதை போலீஸôர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

2008}ம் ஆண்டில் வாகனத் தணிக்கையின்போது வசூலிக்கப்பட்ட தொகை ரூ.​ ஒரு கோடியே 13 லட்சம்.​ ஆனால்,​​ 2009}ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஜனவரி மாதம் ரூ.​ 36 லட்சத்து 62 ஆயிரமும்,​​ பிப்ரவரி மாதம் ரூ.​ 30 லட்சமும்,​​ மார்ச்,​​ ஏப்ரல் மாதங்களில் சராசரியாக ரூ.​ 25 லட்சம் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.​ ​

வாகனத் தணிக்கையில் போக்குவரத்து பிரிவு போலீஸôரை தவிர,​​ சட்டம்,​​ ஒழுங்குப் பிரிவு,​​ குற்றப் பிரிவு போலீஸôரும் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது பணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரைப் பிடிப்பதற்கு சிரமப்பட்டு,​​ இலக்கை எளிதில் எட்டுவதற்காக அரசு மதுக் கடை "பார்' முன் நின்று கொண்டு கடையில் இருந்து வெளியே வரும் நபர்களை மறித்து,​​ அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்கின்றனர்.

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து விலகிச் செல்லாமல் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டால் போலீஸôருக்கும்,​​ அரசுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்.

சனி, 22 மே, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்


First Published : 03 May 2010 12:00:00 AM இசட்


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது. இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர். இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன. டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர். ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர். இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர். விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர். பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தனி​யார் கட்​டுப்​பாட்​டில்அரசு மது​பா​னக் கடை​கள்?


First Published : 06 May 2010 09:46:29 AM இசட்





திருச்சி, ​​ மே 5:​ அரசு மது​பா​னக் கடை​யாக இருந்​தா​லும்,​​ பார்​களை நடத்​தும் தனி​ந​பர்​க​ளின் கட்​டுப்​பாட்​டுக்​குள்​தான் டாஸ்​மாக் மதுக் கடை​கள் இயங்​கு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.​ ​​ ​ ​ ​ தமி​ழ​கத்​தில் மது விற்​பனை மூலம் தனி​ந​பர்​கள் அதிக லாபம் பார்த்து வந்த நிலை​யில்,​​ கடந்த 2003-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் அர​சு​டை​மை​யாக்​கப்​பட்​டது.​ தமி​ழ​கம் முழு​வ​தும் ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் ஏறத்​தாழ 32,000 பணி​யா​ளர்​கள் நிய​மிக்​கப்​பட்​ட​னர்.​​ ​ ​ கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 50,000-ம்,​​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 15,000-ம் முன்​வைப்​புத் தொகை​யாக அர​சி​டம் செலுத்​தி​னர்.​ தற்​போது கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 4,000,​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 2,800-மும் ஊதி​ய​மா​கப் பெற்று வரு​கின்​ற​னர்.​​ ​ தமி​ழ​கம் முழு​வ​தும் தற்​போது 6,500 டாஸ்​மாக் மது​பா​னக் கடை​கள் உள்​ளன.​ இவற்​றில் ஏறத்​தாழ 31,500 ஊழி​யர்​கள் பணி​யாற்​று​கின்​ற​னர்.​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் அர​சுக்கு கடந்த 2008-09 நிதி​யாண்​டில் கிடைத்த வரு​வாய் ரூ.​ 12,800 கோடி.​​ ​ வரு​வாய் அதி​கம் கிடைத்​தா​லும்,​​ டாஸ்​மாக் ஊழி​யர்​க​ளுக்கு வார,​​ தேசிய விடு​மு​றை​கள் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ அந்த நாள்​க​ளில் கூடு​தல் ஊதி​ய​மும் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ ​​ ​ மேலும்,​​ தமிழ்​நாடு தொழில்​சா​லை​கள் சட்​டப்​படி தங்​க​ளுக்கு சலு​கை​கள் வழங்க வேண்​டும் என்​ப​தும் அவர்​க​ளின் கோரிக்​கை​க​ளில் ஒன்று.​ அர​சி​யல் சாசன விதி 309-ன் படி பணி விதி​க​ளை​யும்,​​ பத​வி​க​ளை​யும் முறை​யாக உரு​வாக்க வேண்​டும் என்​றும் அர​சுக்கு ஊழி​யர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ள​னர்.​​ ​ ​ தற்​போது,​​ டாஸ்​மாக் எந்​த​வித வரன்​மு​றை​யும் இல்​லா​மல் மாவட்ட மேலா​ளர் என்ற பத​வி​யில் உள்​ள​வர்​க​ளின் கட்​டுப்​பாட்​டில் உள்​ள​தா​க​வும்,​​ ஆனால்,​​ அவர்​கள் சில தனி​ந​பர்​க​ளின் குறிப்​பாக,​​ ஆளும் கட்​சி​யி​ன​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் ஊழி​யர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ள​னர்.​​ ​ ​ மாவட்ட மேலா​ளர்​க​ளா​கப் பணி​யாற்​று​ப​வர்​க​ளில் சிலர் தங்​க​ளுக்கு கீழே ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்ற பத​வியை உரு​வாக்கி,​​ அதிக விற்​ப​னை​யா​கும் கடை​களை கண்​கா​ணிக்​கச் செய்​வ​தா​க​வும்,​​ பின்​னர் அந்​தக் கடை​யின் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ ஊழி​யர்​க​ளி​டம் குறிப்​பிட்ட தொகையை தனக்கு ஒதுக்க வேண்​டும் என்று மிரட்​டு​வ​தா​க​வும் புகார் எழுந்​துள்​ளது.​​ ​ ​ தாங்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்​னை​க​ளுக்​காக கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கடை​ய​டைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​க​ளில் மாநி​லம் முழு​வ​தும் 102 பேர் இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​னர்.​ இதே​போல,​​ மாநி​லம் முழு​வ​தும் ஏறத்​தாழ 1100 பேர் இடை நீக்​கத்​தில் இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ​ ​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​களை அழைத்​துப் பேசும் தனி​ந​பர்​கள்,​​ குறிப்​பிட்ட தொகை​யைப் பெற்​றுக் கொண்டு தங்​க​ளது செல்​வாக்கு மூலம் அதி​கா​ரி​க​ளி​டம் பேசி மீண்​டும் அவர்​க​ளுக்கு பணி வழங்​கு​கின்​ற​னர்.​​ ​ ​ இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் என்ற வார்த்​தை​யைப் பயன்​ப​டுத்தி எந்​த​வித விதி​மு​றை​யை​யும் கடைப்​பி​டிக்​கா​மல் தங்​க​ளுக்​குள்ள அதி​கா​ரத்தை கையில் எடுக்​கும் இந்த அதி​கா​ரி​கள் "வெறுங்​கை​யில் முழம் அளப்​பது போல" ஊழி​யர்​க​ளி​ட​மி​ருந்து ஒரு தொகை​யைக் கறந்து விடு​கின்​ற​னர்.​​ ​ ​ காஞ்​சி​பு​ரத்​தில் டாஸ்​மாக் ஊழி​ய​ரி​ட​மி​ருந்து ரூ.​ 5,000 லஞ்​சம் பெற்ற மாவட்ட மேலா​ளர் அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​ட​தும் இந்​த​வகை மிரட்​டல் வழி​யில்​தான்.​ மேலும்,​​ சில கடை​க​ளில் திருட்டு நடக்​கும்​போது அதற்கு ஊழி​யர்​களே பலி​கடா ஆக்​கப்​ப​டு​வ​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​​ ​ ​ இது​த​விர,​​ முக்​கி​ய​மான பிரச்​னை​யாக இருப்​பது தனி​யா​ருக்கு பார் நடத்த அனு​மதி வழங்​கி​ய​து​தான்.​ உள்​ளூர் முக்​கிய-​ ஆளும் கட்​சிப் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் இந்த பார்​க​ளால் டாஸ்​மாக் பணி​யா​ளர்​க​ளுக்கு பல்​வேறு நடை​முறை பிரச்​னை​கள் ஏற்​பட்​டுள்​ளன.​ ​​ ​ ​ அரசு மது​பா​னக் கடை என்​ற​போ​தி​லும்,​​ பார் நடத்​து​வோ​ரின் கட்​டுப்​பாட்​டில்​தான் இருப்​ப​தா​க​வும்,​​ இதை எதிர்க்​கும் ஊழி​யர்​கள் எந்​த​வி​தக் கார​ண​மு​மின்றி அதி​கா​ரி​க​ளால் இட​மாற்​றம் செய்​யப்​ப​டு​வ​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ஏனென்​றால்,​​ உள்​ளூர் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் பார்​க​ளில் இருந்து குறிப்​பிட்ட தொகை சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளுக்கு எவ்​வித தடங்​க​லும் இல்​லா​மல் சென்​று​வி​டு​வ​தா​க​வும்,​​ அவர்​கள் ஊழி​யர்​க​ளின் குறை​களை நிவர்த்தி செய்​வ​தில் கவ​னம் செலுத்​தா​மல் பார் நடத்​து​வோ​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​ ​​ ​ ​ இது​த​விர,​​ மது​பாட்​டில்​கள் கொண்டு வரப்​ப​டும் அட்​டைப்​பெட்​டி​க​ளைக் கையாள்​வது,​​ சரக்​கு​களை கவ​ன​மாக இறக்​கு​வது,​​ விற்​பனை மூலம் கிடைக்​கும் பணத்தை வங்​கி​யில் செலுத்​து​வ​தி​லுள்ள சிக்​கல்​கள் ​(சென்னை தவிர)​,​​ ஊக்​கத் தொகை வழங்​கா​தது,​​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ அதி​கா​ரி​க​ளால் எடுக்​கப்​ப​டும் தேவை​யற்ற ஒழுங்கு நட​வ​டிக்கை என பல்​வேறு பிரச்​னை​க​ளால் தங்​க​ளுக்கு மன உளைச்​சல் ஏற்​ப​டு​வ​தாக ஊழி​யர்​கள் புலம்​பு​கின்​ற​னர்.​​ ​ ​ ​ பல்​வேறு பிரச்​னை​க​ளுக்கு இடையே ஊழி​யர்​கள் பணி​யாற்றி வரும் நிலை​யில்,​​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் வரு​வாய் ஈட்​டு​வதை மட்​டுமே குறிக்​கோ​ளா​கக் கொண்டு அரசு செயல்​ப​டக் கூடாது என்​றும்,​​ ஊழி​யர்​க​ளின் நலன்​க​ளை​யும் அரசு கவ​னத்​தில் கொள்ள வேண்​டும் என்​றும் அண்​மை​யில் தனி நீதி​பதி கே.​ சந்​துரு தீர்ப்​ப​ளித்​தார்.​ இதன்​படி,​​ அரசு உட​ன​டி​யாக டாஸ்​மாக் நிர்​வா​கத்தை வரன்​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​கின்​ற​னர் ஊழி​யர்​கள்.

இளைஞர்கள் ஏமாற்றம்...

காவலர் பணிக்கான உடல் தகுதி: 2 செ.மீ.​ உயரம் அதிகரிப்பு;​ இளைஞர்கள் ஏமாற்றம்

First Published : 20 May 2010 02:32:15 AM IST


திருச்சி ​​ ​ :​​ தமிழகத்தில் நிகழாண்டில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கு,​​ இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச உயர அளவில் இருந்து 2 செ.மீ.​ திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்கான விண்ணப்பங்களும் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.​ ​ ​ ​இரண்டாம் நிலைக் காவலர்கள் ​(9,000),​ தீயணைப்பாளர்கள் ​(625),​ சிறைக் காவலர்கள் ​(470) என மூன்று பதவிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.​ ​ எழுத்துத் தேர்வு,​​ உடல் திறன் போட்டிகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என்ற அடிப்படையில்தான் இந்தப் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிகமானோர் சீருடைப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால்,​​ தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குறிப்பாக,​​ நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பணியில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.​ இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும்,​​ மறுபக்கம் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் ஓர் அறிவிப்பையும் ஓசையின்றி அறிவித்துள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.​ ​கடந்தாண்டு வரை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் பொதுப் பிரிவு ஆண்களுக்கு குறைந்தபட்ச உயரமாக 168 செ.மீ.,​​ பெண்களுக்கு ரூ.​ 157 செ.மீ.​ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதில்,​​ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 3 செ.மீ.​ குறைத்துக் கொள்ளப்படும்.​ ஆனால்,​​ தற்போது தேர்வு செய்ய உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச உயரமாக ஆண்களுக்கு 170 செ.மீ.,​​ பெண்களுக்கு 159 செ.மீ.​ என இருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ ​10,000 காவலர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அடிக்கடி அறிவிக்கப்பட்ட போதிலும்,​​ எந்தவித ஓசையுமின்றி குறைந்தபட்ச உயரத்தின் அளவை அதிகரித்திருப்பது காவலர் பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணமும் காவல் துறையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை.​ தற்போது காவல் துறையில் உயரம் குறைவாக உள்ளவர்கள் பணி செய்வதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா?​ அப்படி இருந்தால் அதை அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம் என காவலர் தேர்வுக்காக நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.உயரத்துக்கேற்ற மார்பளவு உள்ளவர்கள் ஓரளவு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று.​ அப்படியெனில்,​​ உயரத்தை மட்டும் அதிகரித்தவர்கள் உயரத்துக்கு ஏற்ற மார்பளவை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.​ ​காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.​ ஆனால்,​​ கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டவர்களில் 168 செ.மீ உயரம் உடையவர்கள் நிகழாண்டில் எப்படியும் போராடி பணியில் சேர்ந்துவிடலாம் என எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் இந்த அறிவிப்பால் திகைத்துள்ளனர்.ஆண்டாண்டு காலமாக இருந்த உயர அளவைத் திடீரென உயர்த்தியதற்கான காரணத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.​ மேலும்,​​ உயர அளவை மீண்டும் பழைய அளவுக்கே மாற்ற வேண்டும்.​ இது,​​ காவலர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல;​ காவலர் பணிக்காக வேறு எந்தப் பணிக்கும் செல்லாமல்,​​ தங்களுடைய இளமைக் காலத்தை முழுமையாகச் செலவிட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்பும் இதுவே.

நட்சத்திர ஜன்னலில்...

ஞாயிறு கொண்டாட்டம்
நட்சத்திர ஜன்னலில் விமலா எட்டிப் பார்க்கிறார்!

First Published : 16 May 2010 11:03:00 AM IST

Last Updated : 16 May 2010 12:10:41 PM IST

விமலா
'சூரியவம்சம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கணவர் படிக்காதவர். பட்டப்படிப்பு முடித்த மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவார். ஒரு குழந்தைக்கு தாயான மனைவியைப் பாசத்தோடு படிக்க அனுப்பிவைப்பார் கணவர். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' என்று கவிஞர் மு.மேத்தாவின் பாட்டு வரும். பாடல் முடிந்தவுடன் கணவரின் சொந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராகப் பணி புரிய ரயிலில் வந்து இறங்குவார் மனைவி.15 நிமிஷங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியோடு அந்தக் காட்சியை மறந்து விடுவோம். ஆனால், காட்சி அதே.. ஆண்டுகள் மட்டும் ஐந்து... கணவர் மற்றும் குடும்பத்தார் உதவியோடு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் (அகில இந்திய அளவில் 162-வது இடம்) திருச்சியைச் சேர்ந்த விமலா (32). திருச்சி திரு.வி.க. நகரில் கணவர் குமார், மகன்கள் ஆகாஷ் (11), பிரகாஷ் (11) (இரட்டைக் குழந்தைகள்), மாமியார் உள்ளிட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் விமலா தனது வெற்றிப் பயணம் குறித்து தொடர்கிறார்...""கரூர் பசுபதிபாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998-ல் இளநிலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தேன். கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய உயர் அதிகாரிகளைக் கண்டதும் நாமும் இதுபோல வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.ஆனால், இறுதியாண்டு படிப்பை முடித்ததும் திருச்சியில் அச்சகம் நடத்தி வரும் குமாருடன் (தனது கணவரைக் கைகாட்டுகிறார்) திருமணம் நடந்துவிட்டது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்.இதற்கிடையே, 2000-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஆகாஷ், பிரகாஷ் பிறந்ததால் நான் முழுநேரமும் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கினேன். 2004-ல் ஒரு நாள் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம் என்று ஏக்கத்தோடு கூறினேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. உனக்கு விருப்பம் இருந்தால் இந்த நொடியிலேயே படிப்பை தொடரலாம் என்றார் எந்தவித கோபமும் இல்லாமல். இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் அன்றே விவாதித்தேன். எனது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்கான அறிகுறி கண் முன்னால் வந்து போனது. அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.2005-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் முதன்முதலாக பங்கேற்றேன். தோல்வியே வந்து சேர்ந்தது. இந்திய வரலாற்றை முதல் நிலைப் பாடமாகவும், தமிழ் இலக்கணத்தை முதன்மைப் பாடமாகவும் தேர்வு செய்தேன். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் போட்டித் தேர்வு மையங்களிலேயே எனது நேரங்கள் கழிந்தன. 2-வது முறையும் (2006) தோல்வியே. 3-வது முறை (2007) முதல் நிலைத் தேர்விலும், 4-வது முறை (2008) முதன்மைத் தேர்விலும் வெற்றி கிடைத்தது. இருப்பினும், முழுமையாக என்னால் வெற்றி பெற முடியவில்லை.தோல்வி ஏற்பட்டபோது எதனால் தோல்வி என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தொடர் தோல்வி என்னைப் பாதித்தாலும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தனர்.எனது தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, ஓரளவு திருப்தியோடு 5-வது முறையாக கடந்தாண்டு (2009) தேர்வு எழுதினேன். அனைத்திலும் வெற்றி பெற்று, இப்போது குடும்பத்தார் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வயதும், திருமணமும் ஒரு தடையே இல்லை. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் புத்தகத்தை தொட்டேன். அதுதான் கஷ்டமாக இருந்தது.ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற இழந்தவை சொந்த பந்தங்களின் நட்பையும். குழந்தைகளின் பாசத்தையும்தான். சொந்தக்காரர்களின் எந்த நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கஷ்டங்களுக்கு இடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.கூட்டுக் குடும்பம், கணவரின் ஒத்துழைப்பு இவை இரண்டுமே திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எனக்கு துணையாக அமைந்தவை. இவை மற்ற பெண்களுக்கும் அமைந்தால், அவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்'' என்றார் விமலா.விமலாவின் கணவர் குமார் தொடர்கிறார்...""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற விமலாவைவிட எனக்குத்தான் பாராட்டுகள் அதிகம் வருகின்றன. யார் வாழ்த்து கூறினாலும், உன் உதவி இல்லாமல் விமலா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்கின்றனர்.கணவன்- மனைவிக்குள் உள்ள புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையே விமலாவுக்கு நான் செய்தவை. மேலும், எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது'' என்றார் குமார்.பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார் குமார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் போகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்த சில நிமிஷ காட்சிகள் குமார்- விமலா தம்பதியின் வாழ்க்கையில் அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதுதானே!