ஞாயிறு, 28 நவம்பர், 2010

வியாழன், 25 நவம்பர், 2010

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஞாயிறு, 14 நவம்பர், 2010

புதன், 3 நவம்பர், 2010

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சனி, 23 அக்டோபர், 2010

புதன், 13 அக்டோபர், 2010

சனி, 18 செப்டம்பர், 2010

சனி, 11 செப்டம்பர், 2010

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சேவை: அந்த இறுதி நாட்களில்...!


First Published : 22 Aug 2010 05:06:02 PM IST


சாகிற நாள் தெரிஞ்சா வாழ்கிற நாள் நரகமாகிவிடும்' என்பார்கள். ஆனால், நோயினால் பாதிக்கப்பட்டு சாகிற நாள் தெரிந்தவர்களுக்கு அவர்களுடைய கடைசிக் காலம் வரை ஓரளவு மன நிம்மதியோடு வாழ்வதற்கான பணிகளைச் செய்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். "சாந்தாலயா அரவணைப்பகம்' என்ற பெயரில் திருச்சி தில்லை நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரவணைப்பு மருத்துவமனையை நண்பர்கள் சிலர் உதவியோடு நடத்தி வருகிறார் மருத்துவர் கே. கோவிந்தராஜ்.இந்த அரவணைப்பகத்தில் யாரைச் சேர்த்துக் கொள்வீர்கள்?""ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய் என வந்துவிட்டால் அவருக்கு முதலில் தேவைப்படுவது குடும்பத்தினரின் அரவணைப்புதான். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதைச் செய்யத் தவறிவிடுகிறோம்.எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, தொழுநோய், தீக்காயம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்குக் குறிப்பிட்ட நிலைக்கு மேல் சிகிச்சை அளிப்பது பலனளிக்காது என்பது மருத்துவர்களுக்கு நன்கு தெரியும்.இத்தனை நாட்களுக்கு மேல் அவர்கள் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என அவர்களுக்கான நாட்களையும் மருத்துவர்கள் குறித்துவிடுவார்கள். இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உறவினர்களால் பராமரிக்க முடியாமல் எத்தனையோ பேர் ஆதரவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உறவுப் பாலமாக அமைவதுதான் இந்த அரவணைப்பகம்.இங்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் என்ன?பெரிய அளவில் சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை. பொதுவாக புற்றுநோய், சிறுநீரக நோய்களைப் பொறுத்தவரையில் கடைசிக் காலத்தில் நோயாளிகள் அந்த நோயினால் உண்டாகும் வலியை தாங்க முடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிப்பவர்களின் வலியைப் போக்கும் வகையில் அவர்களுக்கு மருந்துகள் வழங்கி போதிய உணவுகளையும் வழங்கி வருவதுதான் எங்களது அரவணைப்பகத்தின் பங்கு. இதற்காக இரண்டு பெண் ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர்.தற்போது 7 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.குறிப்பிட்ட காலம் வரை இங்கே தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிலர், தங்களது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஆசைப்படுவதும் உண்டு. அவர்களிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் நாங்கள் அனுப்பிவைத்துவிடுவோம். தேவைப்பட்டால், அவர்கள் விரும்பினால்  மீண்டும் இங்கு வந்து தங்கிக் கொள்ளலாம்.எப்போது ஆரம்பித்தீர்கள்? எவ்வளவுபேர் இங்கே தங்கியிருக்கின்றனர்?25-01-2009 அன்று அரவணைப்பகத்தை நாங்கள் திருச்சியில் தொடங்கினோம். இதுவரை 289 பேர் எங்களின் பராமரிப்பில் இருந்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இப்போது உயிருடன் இல்லை.நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மாதத்துக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கூறினால் மட்டுமே இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவார். எங்களிடம் சேர்ந்தவர்களில் மிகவும் வயது குறைந்தவர் 10 வயதே ஆன ஹேமா என்ற சிறுமி.ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சில மாதங்களில் உயிரிழந்துவிட்டார். இங்கு வருபவர்களில் பெரும்பாலானோருக்கு நாம் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தாலும் அவர்கள் மனதில் அந்த எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். அதில்தான் எங்கள் வெற்றி உள்ளது.நன்கொடை வசூலித்து நடத்துகிறீர்களா?நாங்களாக யாரிடமும் சென்று நன்கொடை வசூலிப்பதில்லை. கடந்த ஓராண்டாக நாங்கள் சிறப்பாக நடத்தி வருவதை அறிந்த சிலர் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளின்போது தங்களுடைய தகுதிக்கேற்ப நிதியுதவி செய்து வருகின்றனர்.பாலசுப்பிரமணியம் என்பவர்தான் அரவணைப்பகம் நடத்த அவரது வீட்டை இலவசமாக வழங்கினார். மேலும் பலர் உணவளிப்பதற்குத் தேவையான பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் விஜயலட்சுமி உதவி செய்து வருகிறார்.உங்களது எதிர்காலத் திட்டம்?எங்களது அரவணைப்பகத்துக்குப் போதிய இடவசதி இல்லை. பெரிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட அரவணைப்பகம் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். விரைவில் இந்த நோக்கம் நிறைவேறும்.திருச்சி மாவட்டம், நொச்சியத்தில் 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளோம். விரைவில் கட்டடப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.திருச்சி தில்லைநகரில் நடத்தப்பட்டு வரும் சாந்தாலயா அரவணைப்பகத்தைப் பற்றிய மேலும் தகவல்களை அறிய  www.sh​anth​all​aya.org என்ற இணையதள முகவரியையும், sh​anth​all​ay​a​@gm​ail.com என்ற இ-மெயில் முகவரியையும் அணுகலாம்.

திங்கள், 19 ஜூலை, 2010

நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க முடியவில்லை


First Published : 16 Jul 2010 12:27:35 PM IST


திருச்சி, ஜூலை 15: திருச்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திணறி வருகிறது மாநகரக் காவல் துறை.  திருச்சி மாநகரைப் பொருத்தவரை வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை, இரு சக்கர வாகனங்கள் திருட்டு, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பு, தனியாகச் செல்லும் ஆண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   நாளொன்றுக்கு குறைந்தது மூன்று வழிப்பறி மற்றும் நகைப் பறிப்பு சம்பவங்களாவது நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் ஒரே நாளில் பல இடங்களில் கொள்ளையும், நகைப் பறிப்பும் தொடர்ந்து நிகழ்வதும் உண்டு. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, தற்போதைய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி மாநகர மக்களிடையே நிலவுகிறது.  ஜூன் மாதத்தில் மட்டும் திருச்சி மாநகரப் பகுதியில் நடந்த நகைப் பறிப்புச் சம்பவங்களில் 200 பவுன் தங்க நகைகள் பறிபோய்விட்டன. ஆனால், இவையெல்லாம் புகார் அளவில் மட்டுமே இருக்கின்றன. தொடக்கத்தில் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க போலீஸôர் தீவிரமாகச் செயல்பட்டது உண்மை. ஆனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் வேகத்துக்கு போலீஸôரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  தற்போதைய மாநகரக் காவல் ஆணையராக இருக்கும் கே. வன்னியபெருமாள் பொறுப்பேற்றவுடன் கொள்ளை, நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க தனிப் பிரிவுகளை ஏற்படுத்தினார். இருப்பினும், இதுவரை போதிய பலன் கிடைக்கவில்லை.  நீண்ட...(?) விசாரணைக்குப் பிறகு நகைப் பறிப்புச் சம்வங்களில் ஈடுபடுவோர் அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்று நகையைப் பறித்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிடுவதை போலீஸôர் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து, திருச்சி மாநகரில் 10 போலீஸôரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 5 அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை வழங்கியது மாநகரக் காவல் துறை. ஒரு கட்டத்தில் நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிக்க முயன்றபோது கொள்ளையர்கள் சென்ற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீஸôர் ஏமாற்றமடைந்தனர்.   பல தனிப் படைகள், பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல், போலீஸôருக்கு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் எனப் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், காவல் துறையால் நகைப் பறிப்பு சம்பவத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  இதுவரை நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவங்களையெல்லாம் போலீஸôர் ஆராய்ந்த போது அதில் கிடைத்த ஒரே நம்பிக்கைக்குரிய தகவல் குற்றவாளிகள் 20 முதல் 30 வயதுக்குள் வரை உள்ளவர்கள் என்றும், அவர்கள் பயன்படுத்துவது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் என்பதும்தான்.   இருப்பினும், குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஓர் இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கிறது. பழைய குற்றவாளிகள் துணையோடு புதியவர்கள் சிலரும் இந்தத் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தனிப் படையில் இடம்பெற்று உயர் அதிகாரிகளில் மனதில் நம்பிக்கை (?) பெற்றுள்ள சிலர், இந்தத் தகவல்களை மறைக்க முயலுவதாகவும் அண்மைக்காலமாக போலீஸôர் மத்தியில் ஒரு பேச்சு இருந்து வருகிறது.  திருச்சி மாநகரில் 5 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள், அவ்வப்போது நடத்தப்படும் வாகனச் சோதனையின் போதும் குறிப்பிட்ட அந்த ரக மோட்டார் சைக்கிளை கண்காணித்தாலே குற்றவாளிகள் எளிதில் சிக்கிவிடுவார்கள் என்கின்றனர் பெயர் கூற விரும்பாத சில போலீஸôர்.   நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் காவல் துறை சில அனுபவமிக்க போலீஸôரின் கருத்துகளையும் கேட்டறிந்து செயல்பட்டால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவதோடு, தொடர்ந்து சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியும் என்பதே திருச்சி மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஞாயிறு, 11 ஜூலை, 2010

சனி, 19 ஜூன், 2010

ஞாயிறு, 13 ஜூன், 2010

ஊர் கூடி தேர் இழுத்தால்...

தி. இன்பராஜ்

 "இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் (இந்தியாவின் உதவியோடு?) சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதில்தான்.
ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்கு எது?.
ஷஇலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்'
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும வரும் இந்தப் போருக்கு முடிவு சில நாள்களில் ஏற்பட்டுவிடுமா? என்பது சில அரசியல் தலைவர்களின் கேள்வி.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடரும் போராட்டங்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?.
பரபரப்பான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதை நேரடியாகப் பார்க்கும் நாம்,  இந்தியா எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆவலோடு காத்திருப்போமே! அதுபோல் இல்லாமல், என்றோ ஒரு நாள் பாகிஸ்தானிடம் நாம் தோற்ற போட்டியின் மறு ஒளிபரப்பை பார்த்தபடி எப்படியும் இந்தியா வெற்ற பெற வேண்டும் என நினைத்து, இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆர்வமுடன் பார்ப்பதைப்பூபோல் இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், இன்னும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்திக் கூறுவது ஷஇலங்கையில் உடனடியாக வேண்டும் போர் நிறுத்தம்' என்ற ஒற்றை வரி வாசகம்தான்.
கேட்டவுடன் மனதுக்கு இதம் தரும் இந்த வாசகத்தை நோக்கித்தானே நமது பயணம் இருக்க வேண்டும்?. ஆனால்  தற்போதைய போராட்டங்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தாலும், குறிக்கோள் எட்டக்கூடியதாக இருக்கிறதா என்பதை போராட்டக்காரர்கள் ஒரு வினாடி நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா (?), உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் என பலகட்டமாக தங்களது எதிர்ப்பைத் தமிழகத்தில் பதிவு செய்த போதிலும், நம் போராட்டத்தின் இலக்கு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்றால், அந்த இடத்தில் ஒரு புள்ளியைக்கூட நம்மால் வைக்க முடியாது; வெற்றிடம்தான்.
ஏனென்றால், சிங்கள அரசை உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யும்படி நாம் (தமிழர்கள்) வலியுறுத்துகிறோம். ஆனால், சிங்கள அரசின் அதிபர் நம்நாட்டிற்கு வந்து, நம் பிரதமரை சந்தித்து, நிதானமாகப் பேசிவிட்டு (ஏன் மனமகிழ்ச்சியோடு உணவும் அருந்தியிருக்கலாம்) தனக்கே உரித்தான பகட்டுச் சிரிப்போடு ஷஇலங்கையில் போர் நிறுத்தம் என்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை' என அறிவிக்கிறார்.
இலங்கையில் இதே வார்த்தையை அவர் கூறும்போது சிங்களவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வதோடு, தேர்தலில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்கையும் பதிவு செய்வார்கள். ஆனால், அவர் கூறியது கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவில்.
ராஜபக்ஷ கூறியது அவரது ரத்தத்தில் கலந்த விஷயமாக இருந்தாலும் அவர் கூறிய நேரம், தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது என்பதால், அவரது கூற்றை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஷபோரை நிறுத்த மாட்டோம்' ஷதமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை' என்று இந்தியாவில் வந்து கூறும் அளவுக்கு இலங்கை அதிபருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உறுதுணையாக இருப்பது யார்?
இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்பட்டதா? எனப்  பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் லாவகமாக பதில் கூறியபடி தப்பிச் செல்லும் தந்திரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்?.
நடைபெற்ற போராட்டங்களை விட்டுவிட்டு இனிவரும் போராட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்தாலும் அதற்கான விடையைத் தேடினாலும் அதற்கான பதிலும், போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமரைச் சந்திப்பது என்பது நல்ல முடிவாக இருந்தாலும், ராஜபக்ஷ இந்தியாவுக்கு வந்து செல்வதற்கு முன் இந்த முடிவை எடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தால் நமது கோரிக்கைக்கு முடிவு கிடைப்பது பற்றி ஓரளவு தகவல் தெùரிந்திருக்கும். இது தாமதமாக எடுத்த முடிவாகவே கருதப்படுகிறது.
புதிய கூட்டணியைத் தேடுவதற்கும், கூட்டணியில் இருந்து சிலரைக் கழற்றி விடுவதற்கும் இலங்கைத் தமிழர் பிரச்னையை கையில் எடுக்காமல், தமிழ் இனத்தின் பரிதாபநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் இப்பிரச்னையை அரசியல் கட்சியினர் கையாள வேண்டிய கட்டாய தருணம் இதுவே.
ஷஊர்கூடி தேர் இழுத்தால்' என்ற வாசகத்தை மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும், ஒன்றுகூடி களத்தில் இறங்கினால் மத்திய அரசு செவி சாய்க்காமலா இருந்துவிடும்.
இதுவரை நடத்திய போராட்டங்களால் இலக்கை நம்மால் எட்டமுடியாவிட்டாலும், இலக்கை அடையும் அளவுக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றுகூடி நடத்தினால் வெற்றி என்ற இலக்கு தேடி வரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்குள் இலங்கையில் ஒரு தமிழனாவது உயிரோடு இருக்க வேண்டுமே?.

(இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தினமணியில் பிரசுரமானது)

குரலை மாற்றி பேசும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து...

தி. இன்பராஜ்

  தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.
  தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.
  கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ, என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக்கொண்டே போகின்றன.
இந்நிலையில், சீன நாட்டு தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஷவாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.
அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், ஷவாய்ஸ் சேஞ்சர்' பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.
இதில், ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.
பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்து பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.
இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு  அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலை சம்பவம் ஒரு உதாரணம்.
மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சேர்ந்தவர் முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.
ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரியவந்தது; ப்ரியா என்ற பெயரில் ஷவாய்ஸ் சேஞ்சர்' வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று. இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.
முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ ஷவாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்கு பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
பொதுவாக, தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தமக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மன நலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
ஆனால், உளவியல் அடிப்படையிலும் குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பதே வருத்தத்துக்குரிய விஷயம்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ஷசெல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை' என்கின்றனர்.
பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

(2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி தினமணி பத்திரிகையில் பிரசுரமானது)

காக்க.. காக்க...

தி. இன்பராஜ்

   மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது உயிரிழந்த அதிரடிப்படைப் பிரிவின் (ஏடிஎஸ்) தலைவராக இருந்த விஜய் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே அண்மையில் கூறிய ஓரு கருத்து ஆழமான சிந்தனையைத் தூண்டியுள்ளது.
"எனது கணவர் ஹெல்மெட் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள்  துளைக்காத ஆடையை அணிவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் எனது மனதில் ஒரு விஷயம்தான் நிழலாடுகிறது. இவையெல்லாம் உயிர் காக்கும் திறன் கொண்டவையா? மேலும், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நவீன ஆயுதங்கள் போலீஸôரிடம் உள்ளனவா? என்றும் தோன்றும்' என்றார் கவிதா கர்கரே.
மும்பை தாக்குதல் சம்பவம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த சில வெளிநாட்டுப் பத்திரிகைகளோ ஷதீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது போலீஸôர் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் பழைமையானவை' என்றும், ஷதற்காப்பு அணிகலன்களோ அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டியவை' என்றும் கேலி செய்திருந்தன.
ஒருவகையில் அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
மறைமுகத் தாக்குதலில் இருந்து மாறி நேரடித் தாக்குதலுக்கு இறங்கியுள்ள தீவிரவாதிகளின் ஒரே பலம் அவர்கள் கையில் வைத்திருந்த நவீன ஆயுதங்களே!.
இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் ஆங்காங்கே போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நவீன ஆயுதங்கள் பற்றிய தகவல் மக்களிடையே அச்சத்தை எழுப்பும் விதத்திலேயே உள்ளது.
தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்றதாக 4 பேரை போலீஸôர் கடந்த மாதம் 28}ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 எம்.எம். ரகத்தைச் சேர்ந்த 5 நவீன துப்பாக்கிகள், 33 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மேலும் 3 துப்பாக்கிகளையும், 70 தோட்டாக்களையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன ரக கைத்துப்பாக்கிகளை பரிசோதித்த போலீஸôர் ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் அவை.
பிடிபட்டவை சில என்றாலும், இதுவரை யாரெல்லாம் துப்பாக்கிகளைக் கடத்தல் கும்பலிடமிருந்து பெற்றனர்? எத்தனை ரெüடிகளிடம் இதுபோன்ற துப்பாக்கிகள் உள்ளன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதேபோல, ஊட்டியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் இறந்ததையெடுத்து, அவரது வீட்டிலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கித் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் ஆகிய நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இத்தனை நவீன ஆயுதங்கள் அவரது வீட்டுக்கு எப்படி வந்தன என விசாரிக்க முடியாமல் போலீஸôர் குழப்பத்தில் இருப்பது தனிக் கதை.
நாளுக்கு நாள் இதுபோன்ற நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது சாதாரணணமான விஷயமாகிவிட்டது. இதிலிருந்து ஷபோலீஸôரைவிட சமூக விரோதிகளே வலிமையாக உள்ளார்கள்' என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் நவீன யுகத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள் புதிது புதிதாகச் சிந்தித்து தங்களது திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், காவல் துறையோ  இன்னும் ஹைதர் அலி காலத்து பழைமையிலிருந்தே மாற மறுக்கிறது.
எதிர்பாராத தாக்குதல்களில் தீவிரவாதிகள் ஈடுபடும் போது, அதிக உயிர்களை நாம் இழப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களும் ஓர் காரணமே!.
இது ஒருபுறமிருக்க உள்ளூர் ரெüடிகளைப் பிடிக்க முயலும் போது நவீன ரக துப்பாக்கியைக் கொண்டு அவர்கள் மிரட்டினால், நம்மிடம் உள்ள 303 ரக துப்பாக்கியைக்  கொண்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை போலீஸôர் எழுப்பும் நிலை உள்ளது.
இதுபற்றி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:  ஷநம்மிடம் நவீன ஆயுதங்கள் எல்லாம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றி நன்கு அறிந்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்.
காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது இருக்கும் ஆர்வம் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் போலீஸôரிடம் குறைந்து வருவது வருத்தத்துக்குரியது.
நவீன ஆயுதங்கள் பற்றி தெரிந்து கொள்வதிலும், எந்த வகை ஆயுதமாக இருந்தாலும் நம்மால் பயன்படுத்த முடியும் என்ற ஆர்வமும் காவலர்களிடம் அதிகரித்தால்தான் சவால்களை எளிதில் எதிர்கொண்டு காவல் துறைக்கு கெட்டபெயர் வராமல் தடுக்கலாம்' என்றார் அவர்.
காவல் துறையை நவீனப்படுத்தும்போது கட்டமைப்பு வசதிகளை மட்டுமே மாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் அவ்வப்போது அறிமுகமாகும் நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தற்காப்பு ஆயுதங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள், ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றியும் போலீஸôர் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

(2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திங்கள்கிழமை தினமணியில் பிரசுரமானது)

தோள் கொடுக்கும் தோரியம்...

தி. இன்பராஜ்

  இன்றைய தினம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது மின் வெட்டுதான்.
தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டாததால் போதிய உற்பத்தி இல்லாமல் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகப் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
  நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் மூலம் 66 சதமும், நீர் மின் நிலையங்கள் மூலம் 17 சதமும், அணு மின் நிலையங்கள் மூலம் 15 சதமும், காற்றாலைகள் உள்ளிட்ட மற்ற ஆதாரங்கள் மூலம் 2 சதமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 25 சதத்தை மட்டுமே நிறைவு செய்கிறது.
உலகில் பெட்ரோல், நிலக்கரி ஆகியவற்றின் வளம் குறைந்து வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மாற்று எரிபொருள் உற்பத்தி செய்யும் கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.
குப்பையிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நாம் கூறினாலும், தற்போதைய தேவைக்கு அவை போதுமானதாகாது.
மின் உற்பத்திக்கு நாம் பல வழிகளைத் தேடி வரும் நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் தோரியம் மூலம் தேவைக்கும் அதிகமான மின் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலக நாடுகளில் மொத்தமுள்ள தோரியம் 25 லட்சத்து 73 ஆயிரம் டன். இதில், 3 லட்சத்து 19 ஆயிரம் டன் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது. உலகளவில் 12 சதத் தோரியம் நம்நாட்டில் உள்ளது.
ராமேசுவரம் உள்ளிட்ட கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பதாகக் கூறுகின்றன தொல்லியல் ஆய்வுகள். தமிழகக் கடலோரப் பகுதிகளான தூத்துக்குடி, ராமேசுவரம், மிடாலம், காணிமடம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தோரியம் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அணுசக்கி ஆய்வில் யுரேனியம்} 233, யுரேனியம்} 235, புளூட்டோனியம்} 239 என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதுதவிர, இந்திய அணுசக்தித் திட்டத்துக்கு அடித்தளமாக இருப்பது தோரியம் என்கிறார் திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் இரா.ஆ. ஜெய்குமார்.
தோரியம் பற்றியும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அவர் மேலும் கூறியது:
ஷஅணு உலையில் தோரியத்தை பயன்படுத்தும் போது அவை நியூட்ரானை உள்வாங்கி யுரேனியம்} 233 ஆக மாறும். அப்போது கிடைக்கும் மின்சார அளவானது யுரேனியத்தைத் தனியாகப் பயன்படுத்தும்போது கிடைப்பதைவிட 7 மடங்கு கூடுதலாக நமக்குக் கிடைக்கும்.
தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் அணுசக்தி தயாரிக்கும் திறமை உலகில் இந்திய விஞ்ஞானிகளால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
நம்நாட்டில் தற்போது உள்ள 22 அணு உலைகளில் 70,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அணு உலைகளை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் லட்சகணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தோரியத்தைப் பயன்படுத்தும் அணுசக்தி திட்டத்துக்கான ஆரம்ப முதலீடு அதிகமாக தெரிந்தாலும், நமக்கு நீண்ட கால நன்மை கிடைக்கும். பொருளாதாரம் வளரும் அளவுக்கு குறைந்த செலவில் நம்மால் மின் உற்பத்தி செய்ய முடியும்.
கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் எப்படி வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
பெருங்கடல்களில் உள்ள கடல் குன்றுகளில் பிளவுகள் வழியாக ஊடுருவும் குளிர்ந்த கடல் நீரின் வெப்பநிலை கடல் எரிமலை குளம்புகளால் அதிகரித்து இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், பெர்ரஸ் போன்ற உலோகங்கள், உப்புகளை கரைத்து பிரிக்கிறது.
இந்தக் கடல் நீர் 380 டிகிரி செல்சியஸ் வெப்ப நீர் ஊற்றாக வெளியில் வருகிறது. கரைந்த உலோக உப்புகள் சில சமயங்களில் உலோக சல்பைடு தாதுக்களாகப் படிகின்றன. இந்தத் தாதுக்களில் தங்கம் ஏராளமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குச் சொந்தமான பொருளாதாரக் கடல் மண்டலத்தில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் ஒரு கோடி டன் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் அண்மையில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை கனிம உலோகங்களிலிருந்து பிரித்தெடுக்க பல கோடி ரூபாய் செலவாகும்.
இந்தத் தோரியம் மூலம் நம் தேவைக்கு ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தும் வகையில் மின்சாரம் தயாரிக்கலாம்' என்றார் பேராசிரியர் ஜெய்குமார்.
தோரியம் என்ற மூலப்பொருள் நம்நாட்டில் அதிகளவு உள்ள நிலையில், கூடுதல் அணு மின் உலைகள் அமைத்து மின் உற்பத்தியை அதிகரிப்பது அரசின் தற்போதைய முக்கிய பங்காகும்.
நம் நாட்டில் கிடைக்கும் தோரியம் நமக்காகத் தோள்கொடுக்க காத்துக் கொண்டிருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்துவது நம் விஞ்ஞானிகளின் கையில்தான் உள்ளது.

(2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திங்கள்கிழமை தினமணியில் பிரசுரமானது)

புதன், 9 ஜூன், 2010

"மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு?


First Published : 09 Jun 2010 10:10:57 AM IST


திருச்சி, ஜூன் 8:  கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விழுப்புரம்} மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்துத் தொடங்கியதும், தற்போது கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் நீண்ட... (?) கால அறிவிப்பு.ஆனால், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் 90 சத ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையே திருச்சி, விருத்தாசலம் வழியாக தற்போது இயக்கப்பட்டு வரும் "செந்தூர்' வாராந்திர விரைவு ரயிலும் (வண்டி எண். 6736/6735) வரும் ஜூலை 29-ம் தேதி முதல் மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.   மேலும், ராமேசுவரத்தில் இருந்து திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலும் (வண்டி எண். 6701/6702) ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னை செல்வதற்கு போதுமான ரயில்கள் இயக்கப்படத் தொடங்கிவிட்டன.இருப்பினும், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவது குறித்த எந்த அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. "மலைக்கோட்டை' விரைவு ரயிலில் மொத்தமுள்ள 22 பெட்டிகளில், திருச்சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 11 பெட்டிகளில் தினமும் கூட்டம் நிரம்பியே காணப்படுவதால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கோடை விடுமுறையில் திருச்சி மக்கள் பட்ட அவதிக்கு குறைவே கிடையாது எனலாம்.ரயில்வே முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, இ. வேலு, தற்போதைய இணை அமைச்சர் இ. அகமது, தெற்கு ரயில்வே முன்னாள் பொது மேலாளர் ஜயந்த், தற்போதைய பொது மேலாளர் தீபக் கிரிஷன் உள்ளிட்ட ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள் திருச்சி வரும்போதெல்லாம் விரைவில் மலைக்கோட்டை ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பதை மறுக்காமல் கூறி வந்தனர்.  இதற்கிடையே, வருகிற ஆகஸ்ட் முதல் தேதி அல்லது 15-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படலாம் என்ற தகவல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகின.  ஆனால், இந்தத் தகவலை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிகப் பிரிவு மேலாளர் ஏ.பி. முத்துராமலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: "ஆகஸ்ட் 15-ம் தேதி மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதில் உண்மையில்லை. இதுவரை இதற்கான கருத்துருவோ, உத்தரவோ தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு வரவில்லை' என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு திருச்சி பகுதி மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுவதற்கு தாமதம் ஏன்? எப்போது இங்கிருந்து இயக்கப்படும்? என்ற கேள்வி ரயில்வே நிர்வாகத்தை நோக்கி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டியது அவர்களின் கடமையே!  கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் கண்துடைப்புதானோ? என்ற நிலை திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.  மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என நுகர்வோர் அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், சேவை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.  போராட்டத்தை தடுப்பதும், திருச்சி பகுதி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் மலைக்கோட்டை ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவதும் ரயில்வே நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. செவிசாய்க்குமா ரயில்வே நிர்வாகம்?.

ஞாயிறு, 30 மே, 2010

பதக்க மங்​கை​கள்!


First Published : 30 May 2010 10:21:00 AM IST


பதக்கங்களுடன் வீராங்கனைகள்
தென் கொரியாவில் உருவான தற்காப்புக் கலையான டேக்வாண்டோ தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கராத்தே போட்டிகளுக்கு இணையாக டேக்வாண்டோ விளையாட்டிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தைப் பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கைகளையும், கால்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி விளையாடும் இந்தப் போட்டிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.குஜராத் மாநிலம், சூரத் நகரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான 4-வது சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற 19 மாணவ, மாணவிகளில் 16 பேர் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகளில் 6 பேர் பதக்கம் பெற்றனர். ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வீரர்கள் பெற்றனர். இந்தக் குழுவில் இடம்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.வெற்றி மகிழ்ச்சியில் ஊர் திரும்பிய பதக்க வீராங்கனைகளான எல். புவனேஸ்வரி (தங்கம்), ஆர். ஜெயஸ்ரீ (வெள்ளி), ஏ. அருள்ஜோதி, ஜி. அனு கீர்த்தனா, எஸ். கண்ணம்மா, வீரர் எம்.ஜி. சந்தோஷ்குமார் (வெண்கலம்) ஆகியோர் திருச்சி புத்தூரில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.தங்கள் அணியின் வெற்றிப் பயணம் குறித்து ஆர்.ஜெயஸ்ரீ பேசினார். ""தமிழக அணியில் 19 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 26 பேர் பங்கேற்றோம். அனைவருமே எங்களுடைய திறமைகளை நன்றாக வெளிப்படுத்தினோம். சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் என திருச்சியில் இருந்து 7 பேர் கலந்து கொண்டோம்.கராத்தே போட்டியில் கைகளுக்கு மட்டுமே அதிக வேலை இருக்கும். ஆனால், டேக்வாண்டோவில் அப்படியில்லை. கைகளைவிடக் கால்களால்தான் அதிகம் விளையாட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டோ பயிற்சி அளித்து வரும் திருச்சி டேக்வாண்டோ சங்க பொதுச் செயலர் எம். கணேசன் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.இந்த விளையாட்டில் பெண்களிடம் அதிக ஆர்வம் இருப்பதற்குப் பள்ளி பருவத்திலேயே பயிற்சி அளிக்கப்படுவதுதான் காரணம். உரிய பாதுகாப்பு சாதன வசதிகள் இருப்பதால், எங்களால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் விளையாட முடிகிறது'' என்றார் அவர்.

சனி, 29 மே, 2010

புதன், 26 மே, 2010

.பாடலுடன் ஓவியம்!

இலக்கு இல்லாத வாகனத் தணிக்கை...

தி..​ இன்பராஜ்
First Published : 26 May 2010 03:25:57 AM IST

Last Updated : 26 May 2010 05:59:15 AM IST

திருச்சி ​​ :​ ​ ​ ​ ​திருட்டு வாகனங்களைக் கண்டுபிடிப்பது,​​ குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரைக் கட்டுப்படுத்துவது,​​ பழைய குற்றவாளிகளை அடையாளம் காண்பது,​​ வெளியாள்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது போன்றவையே வாகனத் தணிக்கையின் நோக்கம்.

ஆனால்,​​ தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளில் இந்த விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படாமல் அபராதம் விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டு போலீஸôர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடக்க காலங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது ஓட்டுநர் உரிமம்,​​ ஆர்.சி.​ புத்தகம்,​​ வாகனக் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் போலீஸôர் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பர்.

ஆனால்,​​ நாளடைவில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர் தங்களுக்குத் தேவையான "மாமூலை' பெறத் தொடங்கினர்.​ இதனால்,​​ போக்குவரத்து பிரிவுக்குச் செல்ல காவலர்களிடையே கடும் போட்டி நிலவியது.

குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் போதும் அல்லது கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வாகன ஓட்டிகள் நிர்பந்திக்கப்படுவதால் விதிமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.​ ​

இதில்,​​ இன்னொரு பிரச்னையும் உள்ளது.​ சமூக விரோதிகள்,​​ குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் வாகனங்களில் பயணிக்கும் போது ஆயுதங்களை எடுத்துச் சென்றாலும்,​​ அவ்வளவு எளிதாக போலீஸôரிடம் சிக்காததற்கு இந்த "மாமுல்' சோதனையும் ஒரு காரணமே!

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ,​​ அதற்கு எதிர்மாறாக சில காவலர்களின் நடவடிக்கையால் நோக்கம் நிறைவேறாமல் போனது.

தற்போதும், ​​ இரு சக்கர வாகனங்கள் மீது காட்டும் தீவிரத்தை போலீஸôர் கார்,​​ வேன்,​​ தனியார் பேருந்து ஆகியவற்றில் காட்டுவதில்லை.​ ஏனென்றால்,​​ காரில் வருவோரிடம் அபராதம் வசூலித்தால் தங்களது வேலைக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளூர போலீஸôரிடம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியைப் பொருத்தவரை வாகனத் தணிக்கை என்பது அன்றாடமாகிவிட்டது.​ நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.​ ஒரு லட்சம் வரை அபராதத் தொகை வசூலிப்பதை போலீஸôர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

2008}ம் ஆண்டில் வாகனத் தணிக்கையின்போது வசூலிக்கப்பட்ட தொகை ரூ.​ ஒரு கோடியே 13 லட்சம்.​ ஆனால்,​​ 2009}ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஜனவரி மாதம் ரூ.​ 36 லட்சத்து 62 ஆயிரமும்,​​ பிப்ரவரி மாதம் ரூ.​ 30 லட்சமும்,​​ மார்ச்,​​ ஏப்ரல் மாதங்களில் சராசரியாக ரூ.​ 25 லட்சம் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.​ ​

வாகனத் தணிக்கையில் போக்குவரத்து பிரிவு போலீஸôரை தவிர,​​ சட்டம்,​​ ஒழுங்குப் பிரிவு,​​ குற்றப் பிரிவு போலீஸôரும் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது பணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரைப் பிடிப்பதற்கு சிரமப்பட்டு,​​ இலக்கை எளிதில் எட்டுவதற்காக அரசு மதுக் கடை "பார்' முன் நின்று கொண்டு கடையில் இருந்து வெளியே வரும் நபர்களை மறித்து,​​ அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்கின்றனர்.

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து விலகிச் செல்லாமல் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டால் போலீஸôருக்கும்,​​ அரசுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்.

சனி, 22 மே, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்


First Published : 03 May 2010 12:00:00 AM இசட்


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது. இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர். இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன. டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர். ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர். இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர். விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர். பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தனி​யார் கட்​டுப்​பாட்​டில்அரசு மது​பா​னக் கடை​கள்?


First Published : 06 May 2010 09:46:29 AM இசட்





திருச்சி, ​​ மே 5:​ அரசு மது​பா​னக் கடை​யாக இருந்​தா​லும்,​​ பார்​களை நடத்​தும் தனி​ந​பர்​க​ளின் கட்​டுப்​பாட்​டுக்​குள்​தான் டாஸ்​மாக் மதுக் கடை​கள் இயங்​கு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.​ ​​ ​ ​ ​ தமி​ழ​கத்​தில் மது விற்​பனை மூலம் தனி​ந​பர்​கள் அதிக லாபம் பார்த்து வந்த நிலை​யில்,​​ கடந்த 2003-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் அர​சு​டை​மை​யாக்​கப்​பட்​டது.​ தமி​ழ​கம் முழு​வ​தும் ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் ஏறத்​தாழ 32,000 பணி​யா​ளர்​கள் நிய​மிக்​கப்​பட்​ட​னர்.​​ ​ ​ கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 50,000-ம்,​​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 15,000-ம் முன்​வைப்​புத் தொகை​யாக அர​சி​டம் செலுத்​தி​னர்.​ தற்​போது கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 4,000,​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 2,800-மும் ஊதி​ய​மா​கப் பெற்று வரு​கின்​ற​னர்.​​ ​ தமி​ழ​கம் முழு​வ​தும் தற்​போது 6,500 டாஸ்​மாக் மது​பா​னக் கடை​கள் உள்​ளன.​ இவற்​றில் ஏறத்​தாழ 31,500 ஊழி​யர்​கள் பணி​யாற்​று​கின்​ற​னர்.​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் அர​சுக்கு கடந்த 2008-09 நிதி​யாண்​டில் கிடைத்த வரு​வாய் ரூ.​ 12,800 கோடி.​​ ​ வரு​வாய் அதி​கம் கிடைத்​தா​லும்,​​ டாஸ்​மாக் ஊழி​யர்​க​ளுக்கு வார,​​ தேசிய விடு​மு​றை​கள் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ அந்த நாள்​க​ளில் கூடு​தல் ஊதி​ய​மும் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ ​​ ​ மேலும்,​​ தமிழ்​நாடு தொழில்​சா​லை​கள் சட்​டப்​படி தங்​க​ளுக்கு சலு​கை​கள் வழங்க வேண்​டும் என்​ப​தும் அவர்​க​ளின் கோரிக்​கை​க​ளில் ஒன்று.​ அர​சி​யல் சாசன விதி 309-ன் படி பணி விதி​க​ளை​யும்,​​ பத​வி​க​ளை​யும் முறை​யாக உரு​வாக்க வேண்​டும் என்​றும் அர​சுக்கு ஊழி​யர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ள​னர்.​​ ​ ​ தற்​போது,​​ டாஸ்​மாக் எந்​த​வித வரன்​மு​றை​யும் இல்​லா​மல் மாவட்ட மேலா​ளர் என்ற பத​வி​யில் உள்​ள​வர்​க​ளின் கட்​டுப்​பாட்​டில் உள்​ள​தா​க​வும்,​​ ஆனால்,​​ அவர்​கள் சில தனி​ந​பர்​க​ளின் குறிப்​பாக,​​ ஆளும் கட்​சி​யி​ன​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் ஊழி​யர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ள​னர்.​​ ​ ​ மாவட்ட மேலா​ளர்​க​ளா​கப் பணி​யாற்​று​ப​வர்​க​ளில் சிலர் தங்​க​ளுக்கு கீழே ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்ற பத​வியை உரு​வாக்கி,​​ அதிக விற்​ப​னை​யா​கும் கடை​களை கண்​கா​ணிக்​கச் செய்​வ​தா​க​வும்,​​ பின்​னர் அந்​தக் கடை​யின் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ ஊழி​யர்​க​ளி​டம் குறிப்​பிட்ட தொகையை தனக்கு ஒதுக்க வேண்​டும் என்று மிரட்​டு​வ​தா​க​வும் புகார் எழுந்​துள்​ளது.​​ ​ ​ தாங்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்​னை​க​ளுக்​காக கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கடை​ய​டைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​க​ளில் மாநி​லம் முழு​வ​தும் 102 பேர் இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​னர்.​ இதே​போல,​​ மாநி​லம் முழு​வ​தும் ஏறத்​தாழ 1100 பேர் இடை நீக்​கத்​தில் இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ​ ​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​களை அழைத்​துப் பேசும் தனி​ந​பர்​கள்,​​ குறிப்​பிட்ட தொகை​யைப் பெற்​றுக் கொண்டு தங்​க​ளது செல்​வாக்கு மூலம் அதி​கா​ரி​க​ளி​டம் பேசி மீண்​டும் அவர்​க​ளுக்கு பணி வழங்​கு​கின்​ற​னர்.​​ ​ ​ இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் என்ற வார்த்​தை​யைப் பயன்​ப​டுத்தி எந்​த​வித விதி​மு​றை​யை​யும் கடைப்​பி​டிக்​கா​மல் தங்​க​ளுக்​குள்ள அதி​கா​ரத்தை கையில் எடுக்​கும் இந்த அதி​கா​ரி​கள் "வெறுங்​கை​யில் முழம் அளப்​பது போல" ஊழி​யர்​க​ளி​ட​மி​ருந்து ஒரு தொகை​யைக் கறந்து விடு​கின்​ற​னர்.​​ ​ ​ காஞ்​சி​பு​ரத்​தில் டாஸ்​மாக் ஊழி​ய​ரி​ட​மி​ருந்து ரூ.​ 5,000 லஞ்​சம் பெற்ற மாவட்ட மேலா​ளர் அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​ட​தும் இந்​த​வகை மிரட்​டல் வழி​யில்​தான்.​ மேலும்,​​ சில கடை​க​ளில் திருட்டு நடக்​கும்​போது அதற்கு ஊழி​யர்​களே பலி​கடா ஆக்​கப்​ப​டு​வ​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​​ ​ ​ இது​த​விர,​​ முக்​கி​ய​மான பிரச்​னை​யாக இருப்​பது தனி​யா​ருக்கு பார் நடத்த அனு​மதி வழங்​கி​ய​து​தான்.​ உள்​ளூர் முக்​கிய-​ ஆளும் கட்​சிப் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் இந்த பார்​க​ளால் டாஸ்​மாக் பணி​யா​ளர்​க​ளுக்கு பல்​வேறு நடை​முறை பிரச்​னை​கள் ஏற்​பட்​டுள்​ளன.​ ​​ ​ ​ அரசு மது​பா​னக் கடை என்​ற​போ​தி​லும்,​​ பார் நடத்​து​வோ​ரின் கட்​டுப்​பாட்​டில்​தான் இருப்​ப​தா​க​வும்,​​ இதை எதிர்க்​கும் ஊழி​யர்​கள் எந்​த​வி​தக் கார​ண​மு​மின்றி அதி​கா​ரி​க​ளால் இட​மாற்​றம் செய்​யப்​ப​டு​வ​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ஏனென்​றால்,​​ உள்​ளூர் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் பார்​க​ளில் இருந்து குறிப்​பிட்ட தொகை சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளுக்கு எவ்​வித தடங்​க​லும் இல்​லா​மல் சென்​று​வி​டு​வ​தா​க​வும்,​​ அவர்​கள் ஊழி​யர்​க​ளின் குறை​களை நிவர்த்தி செய்​வ​தில் கவ​னம் செலுத்​தா​மல் பார் நடத்​து​வோ​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​ ​​ ​ ​ இது​த​விர,​​ மது​பாட்​டில்​கள் கொண்டு வரப்​ப​டும் அட்​டைப்​பெட்​டி​க​ளைக் கையாள்​வது,​​ சரக்​கு​களை கவ​ன​மாக இறக்​கு​வது,​​ விற்​பனை மூலம் கிடைக்​கும் பணத்தை வங்​கி​யில் செலுத்​து​வ​தி​லுள்ள சிக்​கல்​கள் ​(சென்னை தவிர)​,​​ ஊக்​கத் தொகை வழங்​கா​தது,​​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ அதி​கா​ரி​க​ளால் எடுக்​கப்​ப​டும் தேவை​யற்ற ஒழுங்கு நட​வ​டிக்கை என பல்​வேறு பிரச்​னை​க​ளால் தங்​க​ளுக்கு மன உளைச்​சல் ஏற்​ப​டு​வ​தாக ஊழி​யர்​கள் புலம்​பு​கின்​ற​னர்.​​ ​ ​ ​ பல்​வேறு பிரச்​னை​க​ளுக்கு இடையே ஊழி​யர்​கள் பணி​யாற்றி வரும் நிலை​யில்,​​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் வரு​வாய் ஈட்​டு​வதை மட்​டுமே குறிக்​கோ​ளா​கக் கொண்டு அரசு செயல்​ப​டக் கூடாது என்​றும்,​​ ஊழி​யர்​க​ளின் நலன்​க​ளை​யும் அரசு கவ​னத்​தில் கொள்ள வேண்​டும் என்​றும் அண்​மை​யில் தனி நீதி​பதி கே.​ சந்​துரு தீர்ப்​ப​ளித்​தார்.​ இதன்​படி,​​ அரசு உட​ன​டி​யாக டாஸ்​மாக் நிர்​வா​கத்தை வரன்​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​கின்​ற​னர் ஊழி​யர்​கள்.

இளைஞர்கள் ஏமாற்றம்...

காவலர் பணிக்கான உடல் தகுதி: 2 செ.மீ.​ உயரம் அதிகரிப்பு;​ இளைஞர்கள் ஏமாற்றம்

First Published : 20 May 2010 02:32:15 AM IST


திருச்சி ​​ ​ :​​ தமிழகத்தில் நிகழாண்டில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கு,​​ இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச உயர அளவில் இருந்து 2 செ.மீ.​ திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்கான விண்ணப்பங்களும் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.​ ​ ​ ​இரண்டாம் நிலைக் காவலர்கள் ​(9,000),​ தீயணைப்பாளர்கள் ​(625),​ சிறைக் காவலர்கள் ​(470) என மூன்று பதவிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.​ ​ எழுத்துத் தேர்வு,​​ உடல் திறன் போட்டிகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என்ற அடிப்படையில்தான் இந்தப் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிகமானோர் சீருடைப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால்,​​ தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குறிப்பாக,​​ நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பணியில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.​ இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும்,​​ மறுபக்கம் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் ஓர் அறிவிப்பையும் ஓசையின்றி அறிவித்துள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.​ ​கடந்தாண்டு வரை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் பொதுப் பிரிவு ஆண்களுக்கு குறைந்தபட்ச உயரமாக 168 செ.மீ.,​​ பெண்களுக்கு ரூ.​ 157 செ.மீ.​ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதில்,​​ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 3 செ.மீ.​ குறைத்துக் கொள்ளப்படும்.​ ஆனால்,​​ தற்போது தேர்வு செய்ய உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச உயரமாக ஆண்களுக்கு 170 செ.மீ.,​​ பெண்களுக்கு 159 செ.மீ.​ என இருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ ​10,000 காவலர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அடிக்கடி அறிவிக்கப்பட்ட போதிலும்,​​ எந்தவித ஓசையுமின்றி குறைந்தபட்ச உயரத்தின் அளவை அதிகரித்திருப்பது காவலர் பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணமும் காவல் துறையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை.​ தற்போது காவல் துறையில் உயரம் குறைவாக உள்ளவர்கள் பணி செய்வதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா?​ அப்படி இருந்தால் அதை அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம் என காவலர் தேர்வுக்காக நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.உயரத்துக்கேற்ற மார்பளவு உள்ளவர்கள் ஓரளவு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று.​ அப்படியெனில்,​​ உயரத்தை மட்டும் அதிகரித்தவர்கள் உயரத்துக்கு ஏற்ற மார்பளவை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.​ ​காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.​ ஆனால்,​​ கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டவர்களில் 168 செ.மீ உயரம் உடையவர்கள் நிகழாண்டில் எப்படியும் போராடி பணியில் சேர்ந்துவிடலாம் என எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் இந்த அறிவிப்பால் திகைத்துள்ளனர்.ஆண்டாண்டு காலமாக இருந்த உயர அளவைத் திடீரென உயர்த்தியதற்கான காரணத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.​ மேலும்,​​ உயர அளவை மீண்டும் பழைய அளவுக்கே மாற்ற வேண்டும்.​ இது,​​ காவலர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல;​ காவலர் பணிக்காக வேறு எந்தப் பணிக்கும் செல்லாமல்,​​ தங்களுடைய இளமைக் காலத்தை முழுமையாகச் செலவிட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்பும் இதுவே.

நட்சத்திர ஜன்னலில்...

ஞாயிறு கொண்டாட்டம்
நட்சத்திர ஜன்னலில் விமலா எட்டிப் பார்க்கிறார்!

First Published : 16 May 2010 11:03:00 AM IST

Last Updated : 16 May 2010 12:10:41 PM IST

விமலா
'சூரியவம்சம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கணவர் படிக்காதவர். பட்டப்படிப்பு முடித்த மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவார். ஒரு குழந்தைக்கு தாயான மனைவியைப் பாசத்தோடு படிக்க அனுப்பிவைப்பார் கணவர். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' என்று கவிஞர் மு.மேத்தாவின் பாட்டு வரும். பாடல் முடிந்தவுடன் கணவரின் சொந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராகப் பணி புரிய ரயிலில் வந்து இறங்குவார் மனைவி.15 நிமிஷங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியோடு அந்தக் காட்சியை மறந்து விடுவோம். ஆனால், காட்சி அதே.. ஆண்டுகள் மட்டும் ஐந்து... கணவர் மற்றும் குடும்பத்தார் உதவியோடு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் (அகில இந்திய அளவில் 162-வது இடம்) திருச்சியைச் சேர்ந்த விமலா (32). திருச்சி திரு.வி.க. நகரில் கணவர் குமார், மகன்கள் ஆகாஷ் (11), பிரகாஷ் (11) (இரட்டைக் குழந்தைகள்), மாமியார் உள்ளிட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் விமலா தனது வெற்றிப் பயணம் குறித்து தொடர்கிறார்...""கரூர் பசுபதிபாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998-ல் இளநிலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தேன். கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய உயர் அதிகாரிகளைக் கண்டதும் நாமும் இதுபோல வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.ஆனால், இறுதியாண்டு படிப்பை முடித்ததும் திருச்சியில் அச்சகம் நடத்தி வரும் குமாருடன் (தனது கணவரைக் கைகாட்டுகிறார்) திருமணம் நடந்துவிட்டது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்.இதற்கிடையே, 2000-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஆகாஷ், பிரகாஷ் பிறந்ததால் நான் முழுநேரமும் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கினேன். 2004-ல் ஒரு நாள் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம் என்று ஏக்கத்தோடு கூறினேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. உனக்கு விருப்பம் இருந்தால் இந்த நொடியிலேயே படிப்பை தொடரலாம் என்றார் எந்தவித கோபமும் இல்லாமல். இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் அன்றே விவாதித்தேன். எனது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்கான அறிகுறி கண் முன்னால் வந்து போனது. அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.2005-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் முதன்முதலாக பங்கேற்றேன். தோல்வியே வந்து சேர்ந்தது. இந்திய வரலாற்றை முதல் நிலைப் பாடமாகவும், தமிழ் இலக்கணத்தை முதன்மைப் பாடமாகவும் தேர்வு செய்தேன். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் போட்டித் தேர்வு மையங்களிலேயே எனது நேரங்கள் கழிந்தன. 2-வது முறையும் (2006) தோல்வியே. 3-வது முறை (2007) முதல் நிலைத் தேர்விலும், 4-வது முறை (2008) முதன்மைத் தேர்விலும் வெற்றி கிடைத்தது. இருப்பினும், முழுமையாக என்னால் வெற்றி பெற முடியவில்லை.தோல்வி ஏற்பட்டபோது எதனால் தோல்வி என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தொடர் தோல்வி என்னைப் பாதித்தாலும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தனர்.எனது தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, ஓரளவு திருப்தியோடு 5-வது முறையாக கடந்தாண்டு (2009) தேர்வு எழுதினேன். அனைத்திலும் வெற்றி பெற்று, இப்போது குடும்பத்தார் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வயதும், திருமணமும் ஒரு தடையே இல்லை. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் புத்தகத்தை தொட்டேன். அதுதான் கஷ்டமாக இருந்தது.ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற இழந்தவை சொந்த பந்தங்களின் நட்பையும். குழந்தைகளின் பாசத்தையும்தான். சொந்தக்காரர்களின் எந்த நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கஷ்டங்களுக்கு இடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.கூட்டுக் குடும்பம், கணவரின் ஒத்துழைப்பு இவை இரண்டுமே திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எனக்கு துணையாக அமைந்தவை. இவை மற்ற பெண்களுக்கும் அமைந்தால், அவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்'' என்றார் விமலா.விமலாவின் கணவர் குமார் தொடர்கிறார்...""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற விமலாவைவிட எனக்குத்தான் பாராட்டுகள் அதிகம் வருகின்றன. யார் வாழ்த்து கூறினாலும், உன் உதவி இல்லாமல் விமலா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்கின்றனர்.கணவன்- மனைவிக்குள் உள்ள புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையே விமலாவுக்கு நான் செய்தவை. மேலும், எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது'' என்றார் குமார்.பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார் குமார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் போகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்த சில நிமிஷ காட்சிகள் குமார்- விமலா தம்பதியின் வாழ்க்கையில் அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதுதானே!